டுகாடி ஸ்ட்ரீட்பைட்டர் வி 4 எஸ்.பி.
|டுகாடி நிறுவனம் தனது ஸ்ட்ரீட்பைட்டர் மாடலில் வி 4 எஸ்.பி. மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.34.99 லட்சம். சாகசப் பயணங்கள் மற்றும் ரேஸ் பிரியர்களுக்கேற்றதாகும். அதிக திறன் மற்றும் எடை ஒருங்கிணைந்த தத்துவத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 196.5 கி.கி. ஆகும். இது 1,103 சி.சி. திறன் கொண்டது. 208 ஹெச்.பி. திறனை 13 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 123 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 9,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.
இதில் எஸ்.பி.கே. டிரை கிளட்ச் வசதி பயன்படுத்தப் பட்டுள்ளது. கார்பன் பைபரால் ஆன முன்புற மட்கார்டு, லித்தியம் அயன் பேட்டரி ஆகியன இதன் சிறப்பம்சங் களாகும். மக்னீசியம் சக்கரங்கள், பிரெம்போ பிரேக் உள்ளி்ட்டவை இதற்கு அழகு சேர்க்கிறது. ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பிரேக் கண்ட்ரோல்,எலெக்ட் ரானிக் சஸ்பென்ஷன் ஆகிய சிறப்பு நுட்பங்களைக் கொண்டது. கருப்பு வண்ணத்தில் இது கிடைக்கும்.