< Back
சிறப்புக் கட்டுரைகள்
டுகாடி ஸ்ட்ரீட் பைட்டர் வி 4 எஸ்.பி
சிறப்புக் கட்டுரைகள்

டுகாடி ஸ்ட்ரீட் பைட்டர் வி 4 எஸ்.பி

தினத்தந்தி
|
30 Jun 2022 6:05 PM IST

இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள டுகாடி மாடல் தயாரிப்புகளில் இப்போது புதிய மாடல் ஸ்ட்ரீட் பைட்டர் வி 4 எஸ்.பி. என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இது சூப்பர் பைக்கான பனிகேல் வி 4 மாடலைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் எஸ்.பி. என்பது ஸ்போர்ட் புரொடெக்‌ஷன் என்பதன் சுருக்கமாகும். அதாவது சாகசப் பயணத்துக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக இதன் பெட்ரோல் டேங்கில் கண்கவர் வண்ணம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தேவையான இடங்களில் சிவப்பு வண்ணங்கள் பளிச்சென தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விங்லெட் பகுதி கார்பன் பைபரால் ஆனது.

இதில் டிரை கிளட்ச் பிளேட், ஸ்லிப்பர் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான செயல்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது. இதில் லித்தியம் அயன் பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் எடை கணிசமாகக் குறைந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் கார்பன் பைபர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் வாகனத்தின் எடை முந்தைய மாடலை விட 1.4 கிலோ வரை குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 3 கிலோ குறைந்து 177 கிலோவாக உள்ளது.

இதன் சக்கரம் மற்றும் டிஸ்க் பிரேக்குகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 1,103 சி.சி. திறன் கொண்டதாக 208 ஹெச்.பி. திறனையும், 123 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துவதாகவும் இது உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.36 லட்சம். இந்த மாடல் தாய்லாந்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு இங்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் செய்திகள்