மெட்டாலிக் பச்சை வண்ணத்தில் டுகாடி ஸ்ட்ரீட் பைட்டர் வி 2
|டுகாடி நிறுவனத் தயாரிப்புகளில் ஸ்ட்ரீட் பைட்டர் வி 2 மோட்டார் சைக்கிள் மிகவும் பிரபலமானது.
இது தற்போது மெட்டாலிக் பச்சை வண்ணத்தில் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பலரது கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த வண்ணம் அமைந்துள்ளது. இதனால் இது புதிதாக அறிமுகம் செய்யப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டாலிக் வண்ணம் மற்றும் குரோம் பாகங்களால் ஆன என்ஜின் பகுதிகள் இதற்கு புதிய தோற்றப் பொலிவை அளிக்கிறது.
இது 955 சி.சி. திறன் கொண்டது. 153 ஹெச்.பி. திறனை 10,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 101.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் இது வெளிப்படுத்தும். நவீன எலெக்ட்ரானிக் பாகங்கள் இதன் செயல் திறனை மேலும் அதிகரித்துள்ளது.
இதில் டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், குயிக் ஷிப்ட் வசதி, என்ஜின் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. புதிய வண்ணம் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.