< Back
சிறப்புக் கட்டுரைகள்
டுகாடி டயாவெல் வி 4
சிறப்புக் கட்டுரைகள்

டுகாடி டயாவெல் வி 4

தினத்தந்தி
|
10 Nov 2022 3:18 PM IST

பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் டுகாடி நிறுவனம் தற்போது டயாவெல் வி 4 என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்.இ.டி. முகப்பு விளக்கு அதில் `சி' வடிவிலான பகலில் ஒளிரும் விளக்கு ஆகியன இதன் வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அம்சங்களாகும். இதேபோல பின்புற விளக்குகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 அங்குல டி.எப்.டி. திரை உள்ளது.

இது புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி கொண்டது. இது 1,262 சி.சி. திறனுடைய என்ஜினைக் கொண்டது. 168 ஹெச்.பி. திறனை 10,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும் 126 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். 6 கியர்களை உடைய ஸ்பீடு பாக்ஸ் உள்ளது. நான்கு விதமான ஓட்டும் நிலைகள் (ஸ்போர்ட், டூரிங், நகர்ப்புற மற்றும் சேறு, சகதி சாலைகள்) கொண்டது.

இது 211 கி.கி. எடை கொண்டது. இதில் 50 மி.மீ. அளவிலான யு.எஸ்.டி. போர்க் முன்புறமும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.20.49 லட்சம்.

மேலும் செய்திகள்