< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டுகாடி டெசர்ட் எக்ஸ்
|22 Dec 2022 3:34 PM IST
இளைஞர்கள் விரும்பும் வகையிலான வாகனங்களைத் தயாரிக்கும் டுகாடி நிறுவனம் புதிதாக டெசர்ட் எக்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.17.91 லட்சம். ரெட்ரோ ஸ்டைல் வடிவிலான இந்த மோட்டார் சைக்கிளில் 21 அங்குலம் மற்றும் 18 அங்குல வயர் ஸ்போக்ஸ் சக்கரம் உள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 250 மி.மீ. ஆகும். சாகச பயணத்துக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 937 சி.சி. திறனுடைய டெல்ஸ்ட்ரா இரட்டை என்ஜினைக் கொண்டது. இது 110 ஹெச்.பி. திறனையும், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக்கூடியது. கம்பீரமான தோற்றத்துக்கு மெருகேற்றும் வகையில் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இதில் 4 விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன. முன்புறம் 5 அங்குல டி.எப்.டி. திரை புளூடூத் இணைப்பு வசதி கொண்டதாக உள்ளது. நீண்ட தூரம் பயணிப்பதற்கேற்ப கூடுதலாக 8 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்திக் கொள்ளலாம். இதன் எடை 223 கிலோவாகும்.