< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
என்ஜினீயர்களுக்கு வேலை
|12 July 2022 6:12 PM IST
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் 630 விஞ்ஞானிகள் (பி பிரிவு) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கமிஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெட்டீரியல் சயின்ஸ் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங், இயற்பியல், வேதியியல், வேதியியல் என்ஜினீயரிங், ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங், கணிதம், சிவில் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பணி நியமனம் நடைபெற உள்ளது.
என்ஜினீயரிங், பி.டெக் மற்றும் அறிவியல் தொடர்புடைய முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கேட் தேர்வு மதிப்பெண், எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-7-2022.
https://rac.gov.in/drdo/public/login என்ற இணைய பக்கம் வழியே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.