< Back
சிறப்புக் கட்டுரைகள்
டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை
சிறப்புக் கட்டுரைகள்

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை

தினத்தந்தி
|
28 Aug 2022 4:24 PM IST

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் டெக்னீசியன் ஆகிய பதவிகளில் பல்வேறு பணி பிரிவுகளில் 1,901 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ), பணியாளர் திறன் மேலாண்மை மையத்தில் (Ceptam) மூத்த தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் ஆகிய பதவிகளில் பல்வேறு பணி பிரிவுகளில் 1,901 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஏற்ப 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.எஸ்சி போன்ற படிப்புகள் கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

23-9-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறனறி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-9-2022.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களுக்கு https://www.drdo.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்