பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 1061 பணியிடங்கள்
|பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) மூலம் பல்வேறு பிரிவுகளில் 1061 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) மூலம் ஸ்டெனோ கிராபர், ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி, நிர்வாக உதவியாளர், வாகன ஆபரேட்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 1061 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஏற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணி சார்ந்த படிப்பறிவுடன், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
7-12-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் கிரேடு-1, ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி பணிகளுக்கு மட்டும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வு உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறனறிவு தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 7-12-2022.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.drdo.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.