< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டாக் கோ ஸ்மார்ட் கடிகாரம்
|27 Nov 2022 9:48 PM IST
மின்னணு கருவிகளைத் தயாரிக்கும் டிஸோ நிறுவனம் புதிதாக டாக் கோ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
அழகிய வட்ட வடிவிலான டயலைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விற்பனையக விலை சுமார் ரூ.4,800. இதன் டயல் 1.39 அங்குல அளவிலானது.
இதில் உடலியக்க செயல்பாடுகளை உணர்த்தும் வசதி உள்ளது. காற்றில் ஆக்சிஜன் அளவு, மன அழுத்தம், சோர்வடைதல், தூக்க குறைபாடு, அன்றாம் நடந்த நடை, உடலில் எரிக்கப்பட்ட கலோரி அளவு உள்ளிட்டவற்றை இது சரியாகக் காட்டும். ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு இதன் மூலமே பதில் அளிக்கலாம். 110 விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் அதன்மூலம் உடலில் எரிக்கப்பட்ட கலோரியை துல்லியமாகக் காட்டும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை செயல்படும்.