< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டிஸோ டி அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்
|27 Jan 2023 9:55 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் டிஸோ நிறுவனம் புதிதாக டி அல்ட்ரா என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது 1.78 அங்குல அமோலெட் திரை, புளூடூத் இணைப்பு அழைப்பு வசதி கொண்டது. இதில் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் டிஸோ ஹெல்த் செயலி உள்ளது. விளையாட்டு சார்ந்த பயிற்சி மற்றும் ஜி.பி.எஸ்., வழித்தட உதவி, உடற்பயிற்சி விவரம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அளிக்கும். இதன் மேல்பாகம் அலுமினியம் பிரேமால் ஆனது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். கருப்பு, நீலம், கிரே நிறங்களில் வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2,699.