< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டிஸோ டி 2 ஸ்மார்ட் கடிகாரம்
|23 March 2023 7:39 PM IST
டிஸோ நிறுவனம் டிஸோ டி 2 மற்றும் டி 2 பவர் என்ற பெயரில் இரண்டு மாடல் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.
இது 1.91 அங்குல திரையைக் கொண்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 120 விதமான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும்.
இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தண்ணீர் அருந்துவதை நினைவூட்டுவது உள்ளிட்ட வசதிகள் கொண்டது. ஸ்மார்ட்போனின் கேமராவை கட்டுப்படுத்தும் வசதி, போனில் பாடல்கள் கேட்கும்போது ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் வசதி, போனிலேயே விளையாட்டு, குறுஞ்செய்தி உள்ளிட்ட வசதிகள் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.5,999.