< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
நீரிழிவை கண்காணிக்கும் டாட்டூ
|22 Oct 2022 1:07 PM IST
எம்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தற்போது நீரிழிவை எளிதில் கண்காணிக்கும்படி டாட்டூ ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
இந்த டாட்டூ உடலில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவை துல்லியமாக அளவிட்டு தெரிவிக்கும். இங்க் (டாட்டூ மை)குடன் இணைந்துள்ள பயோ சென்சார் மூலம் இதனை சாத்தியமாக்கியுள்ளனர்.
இதனை எம்.ஐ.டி. மற்றும் ஹார்வர்டு மருத்துவக்கல்லூரி இரண்டும் இணைந்து செய்துவருகின்றன. மூன்று சென்சார் மைகளில் ஒன்று ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் கண்டறிய உதவுகிறது.
மையின் நிறம் நீல நிறத்திலிருந்து புரவுன் நிறத்திற்கு மாறினால் சர்க்கரை அளவு அதிகம். இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மாறினால் அமிலத்தன்மை மாறுகிறது என்று அர்த்தம். மூன்றாவது சென்சார் உப்பு அளவைக் கூறுகிறது. புத்தம் புதியதாக இருந்தாலும் மார்க்கெட்டை எட்டிப்பார்க்க பல்வேறு சோதனைகளைத் தாண்டி வர வேண்டியதிருக்கிறது.