< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டெல் ஜி 15 லேப்டாப்
|30 Jun 2022 7:47 PM IST
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் டெல் நிறுவனம் புதிதாக ஜி 15 ஏ.எம்.டி. எடிஷன் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஹெச் சீரிஸ் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 15.6 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. நிவிட்யா ஆர்.டி.எக்ஸ். உள்ளதால் இதில் வீடியோகேம்களை சிறப்பாக விளையாடி மகிழ முடியும். கிரே நிறத்தில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.83,990.
இதில் தெர்மல் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதால் இதை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் சூடேறாது.