< Back
சிறப்புக் கட்டுரைகள்
டெபி கிராவிடி புரோ இயர்போன்
சிறப்புக் கட்டுரைகள்

டெபி கிராவிடி புரோ இயர்போன்

தினத்தந்தி
|
2 Jun 2022 8:17 PM IST

டெபி நிறுவனம் புதிதாக கிராவிடி புரோ என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

உயர் தரத்திலான பொருட்களைக் கொண்டு குறைந்த விலையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடியோகேம் விளையாடுபவர்களுக்கு ஏற்றதாக இதில் டர்போ நிலையை தேர்வு செய்யும் வசதி உள்ளது.

இதில் 4 மைக்குகள் உள்ளன. இது சுற்றுப்புற இரைச்சலைத் தடுத்து பேசுவது மறுமுனையில் இருப்பவர்களுக்கு எளிதில் கேட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் புளூடூத் 5.3 இணைப்பு வசதி உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து செயல்படும். சார்ஜிங் கேசில் உள்ள பேட்டரி மூலம் இதை 25 மணி நேரம் செயல்பட வைக்க முடியும். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே இது 3 மணி நேரம் செயல்படும். நீர், வியர்வை புகாத தன்மை கொண்டது. கருப்பு, வெள்ளை, நீல நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,399.

மேலும் செய்திகள்