< Back
சிறப்புக் கட்டுரைகள்
லேண்ட் ரோவர் டிபெண்டர் 130
சிறப்புக் கட்டுரைகள்

லேண்ட் ரோவர் டிபெண்டர் 130

தினத்தந்தி
|
16 March 2023 2:49 PM GMT

பிரீமியம் எஸ்.யு.வி. ரகமான லேண்ட் ரோவரில் தற்போது டிபெண்டர் 130 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் மாடல்களாக இவை வந்துள்ளன. டிபெண்டர் மாடலில் இது மூன்று வரிசை இருக்கைகளுடன் 8 பேர் பயணிக்கும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் 2 வேரியன்ட்கள் வந்துள்ளன.

முன் வரிசை மற்றும் இரண்டாம் வரிசை பயணிகளுக்கென தனித்தனியாக 2 திறந்து மூடும் மேற்கூரை வசதி கொண்டது. மூன்றாம் வரிசையில் அமர்ந்திருப்பவருக்கு போதிய வெளிச்சம் இருக்கும் வகையிலும், நான்கு நிலை குளிர் சாதன வசதியும் உள்ளது. டேஷ்போர்டில் 11.4 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் வசதி உள்ளது.

இது கனெக்டெட் கார்டெக் தொழில் நுட்பத்துடன் இணைந்தது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. மெரிடியன் ஆடியோ சிஸ்டம் இனிய இசையை அளிக்கிறது. முன் இருக்கைகள் மின்சாரத்தில் இயங்கும் வகையிலானது. இதனால் இதை தேவைக் கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். மேலும் 360 டிகிரி சுழலும் கேமரா வசதி உள்ளது. மேட்ரிக்ஸ் எல்.இ.டி. முகப்பு விளக்கு அழகிய தோற்றத்தையும் 20 அங்குல அலாய் சக்கரம் சொகுசான பயணத்தை யும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

இதில் 3 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது 400 ஹெச்.பி. திறனையும், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. 8 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது.

பெட்ரோல் ஹெச்.எஸ்.இ. மாடல் விலை சுமார் ரூ.1.30 கோடி. பெட்ரோல் எக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.1.41 கோடி. டீசல் ஹெச்.எஸ்.இ. மாடல் விலை சுமார் ரூ.1.30 கோடி. டீசல் எக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.1.41 கோடி.

மேலும் செய்திகள்