< Back
சிறப்புக் கட்டுரைகள்
டைவா ஸ்மார்ட் டி.வி
சிறப்புக் கட்டுரைகள்

டைவா ஸ்மார்ட் டி.வி

தினத்தந்தி
|
7 July 2022 1:05 PM GMT

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டைவா நிறுவனம் புதிதாக இரண்டு ஸ்மார்ட் டி.வி.க்களை (32 அங்குலம் மற்றும் 43 அங்குலம்) அறிமுகம் செய்துள்ளது.

இவை ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தில் செயல்படுபவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.12,990. 43 அங்குல மாடல் விலை சுமார் ரூ.22,900.

புளூடூத் மூலமான குரல் வழி கட்டுப்பாட்டில் இது செயல்படக் கூடியது. இவற்றில் ஏ பிளஸ் தரத்திலான டிலெட் பேனலும், லுமினிட் தொழில் நுட்பமும் பின்பற்றப்பட்டுள்ளது. இனிய இசையை வழங்க 20 வாட் திறன் கொண்ட முழு ஹெச்.டி. ஸ்டீரியோ ஸ்பீக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏ 53 குவாட் கோர் பிராசஸர் மற்றும் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. இவை தவிர இணைப்புக்கேற்ப 2 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட், எதர்நெட் ஆகிய வசதிகளைக் கொண்டது.

மேலும் செய்திகள்