< Back
சிறப்புக் கட்டுரைகள்
டிரைவர்களுக்கு பணி வாய்ப்பு
சிறப்புக் கட்டுரைகள்

டிரைவர்களுக்கு பணி வாய்ப்பு

தினத்தந்தி
|
29 Jan 2023 7:37 PM IST

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) டிரைவர், ஆப்பரேட்டர் என 451 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கனரக மோட்டார் வாகனம், போக்குவரத்து வாகனம் அல்லது இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 22-2-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 27 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2023.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.cisfrectt.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்