< Back
சிறப்புக் கட்டுரைகள்
குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன என ஆராய்ச்சி நடத்த சீனா திட்டம்!
சிறப்புக் கட்டுரைகள்

குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி 'எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன' என ஆராய்ச்சி நடத்த சீனா திட்டம்!

தினத்தந்தி
|
7 Nov 2022 2:58 PM IST

குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி அதன் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

பீஜிங்,

சீனா தற்போது புதிதாக விண்வெளியில் 'டியாங்காங்' ஆராய்ச்சி மையத்தை அமைத்து வருகிறது.

இந்த நிலையில், குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி அதன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளியில் வளர்ச்சி மற்றும் உடலியல் மாறுபாடு பற்றிய ஆராய்ச்சி நடத்த குரங்கை விண்வெளி மையத்திற்கு அனுப்ப உள்ளனர். விண்வெளியில் குரங்கின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை தெரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீன ஆராய்ச்சியாளரான ஜாங் லூ கூறுகையில், விலங்குகளைக் கொண்டு முதற்கட்ட ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையான கூற்றுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

மீன்கள், நத்தைகள் போன்ற உயிரினங்கள்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன. சோவியத் யூனியன் காலத்தில் இனப்பெருக்க நோக்கத்திற்காக 18 நாட்கள் எலிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன.ரஷியா மேற்கொண்ட ஆராய்ச்சியில் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டுவரப்பட்ட உயிரினங்களுக்கு இடையே இனப்பெருக்கம் ஏற்படவில்லை. இதனையடுத்து தற்போது குரங்குகள் அனுப்பப்பட உள்ளன.

குரங்குகள் விண்வெளிக்கு அனுப்பப்படுவது புதிதான விஷயமல்ல. புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில், அவை எவ்வாறு வளர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை தெரிந்துகொள்ள இந்த புதிய ஆராய்ச்சி உதவும்.

முன்னதாக, 1948 இல், நாசா உருவாக்கப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பு அமெரிக்க விமானப்படை ஆல்பர்ட் என்ற ஆண் ரீசஸ் குரங்கை வி-2 ராக்கெட் முலம் விண்ணில் ஏவியது. ஆனால் ஆல்பர்ட் விண்வெளியை அடைவதற்குள் மூச்சுத் திணறி இறந்தது.

அடுத்த ஆண்டு, ஆல்பர்ட் II என்ற குரங்கு இதேபோன்ற பணிக்கு அனுப்பப்பட்டது. அதன் முன்னோடியைப் போலல்லாமல், ஆல்பர்ட் II தப்பித்து விண்வெளியை அடைந்த முதல் குரங்கு என்ற சாதனையை படைத்தது. 1959 இல் மிஸ் பேக்கர் என்ற குரங்கு, ஜூபிட்டர் ராக்கெட்டில் ஏவப்பட்டது.

புவியீர்ப்பு இல்லாத காரணத்தால், விண்வெளியில் உள்ள உயிர்களிடையே விரைப்பைகள் மற்றும் பிற இனப்பெருக்க உறுப்புகள் சேதப்படுத்தப்படும். இது விலங்குகளின் பாலின ஹார்மோனில் குறிப்பிடத்தக்க சரிவுக்கு வழிவகுக்கிறது.

பல நாடுகள் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் மனிதர்கள் குடியேற திட்டமிடுகின்றன, குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதால், இந்த சோதனைகள் கட்டாயம் தேவைப்படும் ஒன்று என்று பேராசிரியரான கெஹ்கூய் கீ கூறினார்.

மேலும் செய்திகள்