< Back
சிறப்புக் கட்டுரைகள்
சரவிளக்குகள்- ஓர் அறிமுகம்
சிறப்புக் கட்டுரைகள்

சரவிளக்குகள்- ஓர் அறிமுகம்

தினத்தந்தி
|
5 Oct 2022 1:29 PM IST

விளக்கு வீட்டிற்கு ஒளி கொடுக்கும். ஆனால் சரவிளக்கு (Chandelier ) வீட்டை ஒளி வெள்ளத்தில் மூழ்கடிக்கும். சரவிளக்கு வீட்டின் அழகை பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருகாலத்தில் சரவிளக்கு என்பது செல்வ செழிப்பின் அடையாளமாவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டது. மாளிகைகள், மிகப் பெரிய வீடுகளில் தான் சரவிளக்கு இருக்கும். ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் வாங்கி மகிழலாம்.

சரவிளக்கு என்பது விளக்குகளை வரிசையாக பல அடுக்குகளில் பொருத்தி, வீட்டுக் கூரையின் மைய பகுதியில் தொங்க விடப்படும் விளக்காகும். இந்த அடுக்குகள் 1 - 5 வரை இருக்கும். உங்கள் வீட்டின் மேற்கூரையின் உயரம் பொறுத்து அடுக்குகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவை கண்ணாடி, கண்ணாடி மணிகள், செம்பு, பித்தளை, நல்ல இரும்பு மற்றும் மரத்தூள் கொண்டு உற்பத்தி செய்யப்படும். பொதுவாக டைனிங் ஹாலில் தான் சரவிளக்கு பயன்டுத்துவார்கள். ஆனால் வீட்டின் எந்த அறையிலும் அதை பயன்படுத்தலாம்.

என்னென்ன வகையான சரவிளக்குள் இருக்கிறது என்பது தெரிந்தால், நீங்கள் உங்கள் வீட்டுக்கு சரவிளக்கு வாங்க விரும்பும் போது உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்வது எளிதாக இருக்கும். வீட்டிற்கு நிறைய வெளிச்சம் வேண்டும் என்பதற்காக வாங்குகிறீர்களா? வீட்டை அழகு படுத்த வாங்குகிறீர்களா? உங்கள் எல்லா தேவைகளுக்கு ஏற்றார் போல் சரவிளக்குகள் இப்போது கிடைக்கும். என்னென்ன வகையான சரவிளக்குகள் உள்ளன என்பதை பாப்போம்.

கிரிஸ்டல் சரவிளக்குகள்.

கிரிஸ்டல் சரவிளக்குகள் கண்ணாடியால் உற்பத்தி செய்யப்படுவது. ஒளியை பல மடங்கு அதிகரிக்கக் கூடியது. இந்த சரவிளக்கு பொருத்தப் படும் அறை ஒளி வெள்ளத்தில் மூழ்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடக்க காலத்தில் சரவிளக்குகளில் மெழுவத்தி ஏற்றப்பட்டது. மெழுகுவத்தியின் ஒளியை அதிகரிப்பதற்காக கண்ணாடிகள் அமைக்கப் பட்டது.

நவீன சரவிளக்கு

காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவத்தை மாற்றி அலங்காரத்தோடு வடிவமைக்கப் படுவது. சதுரம், முக்கோணம், அறுகோணம், என பல வடிவங்களில் கிடைக்கும். இதனால் அறையில் ஒளி பரவும் விதம் ஒரு வகையான அழகை கொடுக்கும்.

சமகால சரவிளக்குகள்.

சமகால சரவிளக்கை, பல காலகட்டங்களில் வடிவமைக்கப்பட்ட சரவிளக்குகளின் வடிவங்களின் கலப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன் படுத்தப் பட்ட சரவிளக்குகளில் இருந்து ஒவ்வொரு தன்மையை எடுத்து ஒன்றாக தொகுத்து வடிவமைக்கப் படுவது. பலரும் விரும்பும் விளக்கு சமகால விளக்காகும்.

ட்ரம் சரவிளக்கு

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த விளக்கில் இருந்து வரும் ஒளி ட்ரம் வடிவத்தில் இருக்கும். அதற்கு ஏற்றது போல் விளக்குகள் அழகாக அடுக்கப் பட்டிருக்கும். அறைக்கு ஒரு வகையான அழகை கொடுக்கும்.

மினி சரவிளக்கு

ஒரு சிறிய அறையை சரவிளக்கால் அலங்கரிக்க விரும்பினால், மினி சரவிளக்கு தான் உங்கள் தேர்வு. உங்கள் பட்ஜெட்க்கு ஏற்றாற்போல் கிடைக்கும். பெரிய சரவிளக்கு பொறுத்த இயலாத சூழ்நிலையில் மினி சரவிளக்கு உங்கள் ஆசை பூர்த்தி செய்யும்.

ஸ்புட்னிக் சரவிளக்கு

ஸ்புட்னிக் சரவிளக்கு வீட்டை சிறப்பாக அழகு படுத்ததும். இதன் வடிவம் சிறப்பானது. ஒரு புள்ளியில் பல கிளைகள் துவங்கும்; அந்த கிளைகள் வட்ட வடிவமோ, எதோ ஒரு வடிவத்திலோ அமைத்திருக்கும். கிளையின் ஒரு முனையிலோ, இரண்டு முனையிலோ விளக்கு பொருத்தப் பட்டிருக்கும்.

வாட்டர்பால் சரவிளக்கு

பெயருக்கு ஏறாற்போல் வாட்டர்பால் சரவிளக்கில் கண்ணாடி மணிகள் நீர்வீழ்ச்சி போல் தொங்கவிடப் பட்டிருக்கும். இது வட்டம், சதுரம், முக்கோணம் என பல வடிவங்களில் கிடைக்கும். வடிவங்களுக்கு ஏற்றாற்போல் வெளிச்சமும் வேறுபடும்.

ஹைபிரிட் சரவிளக்கு

மேற்சொன்ன எந்த சரவிளக்கு உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், ஹைபிரிட் சரவிளக்கு தான் உங்கள் தேர்வு. பல வடிவங்களின் கலப்பு தான் ஹைபிரிட் சரவிளக்கு. இதில் உங்கள் மனம் விரும்பும் வடிவம் உறுதியாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலே சொல்லப்பட்ட சரவிளக்குகளின் வகைகளை கவனத்தில் கொண்டு, உங்கள் விருப்பத்திற்கு பொருந்தும் சரவிளக்கை வாங்கி, வீட்டில் பொருத்தி மகிழுங்கள். வீட்டை ஒளிமயமான வீடாக மாற்றுங்கள்.

மேலும் செய்திகள்