< Back
சிறப்புக் கட்டுரைகள்
பிரையோ 500 சீரிஸ்: லாஜிடெக் வெப் கேமரா, ஹெட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

பிரையோ 500 சீரிஸ்: லாஜிடெக் வெப் கேமரா, ஹெட்போன்

தினத்தந்தி
|
8 Dec 2022 3:11 PM IST

கம்ப்யூட்டர் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக வெப் கேமரா மற்றும் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பிரையோ 500 சீரிஸ் என்ற பெயரில் வெப் கேமரா வும், ஜோன் வைப் என்ற பெயரில் ஹெட்போனும் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

வெப் கேமரா விலை சுமார் ரூ.14,999. ஹெட்போனின் விலை சுமார் ரூ.12,495. லேப்டாப் உதவியுடன் வீட்டிலிருந்து பணி புரிவோரில் பெரும்பாலானோர் அதில் உள்ளீடாக உள்ள கேமரா மூலம் வீடியோ கான்பிரன்ஸ் போன்ற கருத்தரங்குகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்தனர். அத்தகையோரின் வசதிக்காக வெப் கேமராவை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. போதிய வெளிச்சத்தில், சரியான கோணத்தில் காட்சிகள் தெரிவதற்கு இந்த வெப் கேமரா உதவியாக இருக்கும்.

இதேபோல வயர்லெஸ் ஹெட்போனும் வீட்டிலிருந்து பணி புரிபவர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்