< Back
சிறப்புக் கட்டுரைகள்
பசுபிக் பெருங்கடலின் முத்து
சிறப்புக் கட்டுரைகள்

பசுபிக் பெருங்கடலின் முத்து

தினத்தந்தி
|
19 March 2023 3:06 PM IST

பிரெஞ்ச் பொலினீஸியாவில் சுமார் 12 சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்திருக்கும் ஒரு குட்டித் தீவு போரா போரா.

அரிதான முத்துகளாலும் பவளங்களாலும் சூழ்ந்துள்ள இந்தத் தீவில் தண்ணீருக்கு மேல் அழகழகான குடில்களை அமைத்திருக்கின்றனர். அங்கே தங்கி கடலின் அழகையும் தீவின் வசீகரத்தையும் ரசிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் போரா போராவை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் 12 ஆயிரம் ரூபாய். இந்தத் தீவிலிருந்து கொண்டு சூரிய உதயம், அஸ்தமனத்தைப் பார்ப்பது தனி அனுபவம் என்று பூரிக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். 11 ஆயிரம் பேர் வசிக்கும் இந்தத் தீவு 'பசுபிக் பெருங்கடலின் முத்து' என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்