< Back
சிறப்புக் கட்டுரைகள்
பி.எம்.டபிள்யூ. எக்ஸ்.எம்., எஸ்.1000 ஆர்.ஆர்
சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ்.எம்., எஸ்.1000 ஆர்.ஆர்

தினத்தந்தி
|
22 Dec 2022 2:17 PM IST

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எக்ஸ்.எம். மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.2.60 கோடி. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எம் பிரிவின் 50-ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தக் கார் அறிமுகம் செய்யப்படுகிறது. இது முற்றிலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இது 653 ஹெச்.பி. திறன் கொண்டது. இதனால் ஸ்டார்ட் செய்து 4.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். பச்சை, சிவப்பு, வெள்ளை, கிரே, கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும்.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரிக்கு 8 ஆண்டுகளும் அதிகபட்சம் 1,20,000 கி.மீ. தூரமும் உத்திரவாதம் உண்டு என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தனித்துவ அடையாளமான கிட்னி வடிவிலான முகப்பு கிரில், மெல்லிதான எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளிட்டவை இதன் சிறப்பாகும். 22 அங்குல அலாய் சக்கரம் வாகனத்திற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

இதில் உள்ள பேட்டரி 480 கிலோவாட் (653 ஹெச்.பி.) திறனையும், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. ஆகும். 8 ஸ்டெப்டோனிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்டது. 14.9 அங்குல தொடு திரை அனைத்து வித தகவல்களை அளிக்கும் வகையிலானது. வாகன நெரிசல் உள்ளிட்ட விவரங்களை அளிக்கும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர் 12.9 அங்குலத்தில் உள்ளது. டிஜிட்டல் சாவி மற்றும் ரிமோட் லாக்கிங் வசதி கொண்டது.

ஸ்மார்ட்போன் மூலம் காரை இயக்குவதும் மற்றும் ஆப் செய்வதும் இதில் சாத்தியம். பார்க்கிங் அசிஸ்டன்ட், பின்புற கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் வசதி உண்டு. 50 மீட்டர் தொலைவுக்கு ஸ்டீரிங்கை செயல்படுத்தாமல் கார் தானாகவே செயல்படும். முன்புற மோதல் தடுப்பு எச்சரிக்கை, லேன் மற்றும் ஸ்டீயரிங் அசிஸ்டென்ட், குரூயிஸ் கண்ட்ரோல், அவசரகால நிறுத்தும் உதவி, லேன் மாறுவதற்கான வசதி, வாகன நெரிசல் குறித்த எச்சரிக்கை உள்ளிட்ட அனைத்து தகவலையும் அளிக்கும்.

மேலும் செய்திகள்