< Back
சிறப்புக் கட்டுரைகள்
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 7 40 ஐ எம் ஸ்போர்ட்
சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 7 40 ஐ எம் ஸ்போர்ட்

தினத்தந்தி
|
31 Aug 2022 1:53 PM IST

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எம் பிரிவின் 50-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக எக்ஸ் 7 40 ஐ எம் ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மறைமலை நகரில் உள்ள இந்நிறுவன ஆலையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்குளூசிவ் எடிஷனாக இது தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் விலை சுமார் ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். முகப்பு தோற்றத்தில் பிரதான மாக இடம்பெறுவது கிட்னி வடிவிலான கிரில் ஆகும். இதன் மேல் பகுதியில் மிகவும் எடுப்பாக தெரியும் வகையில்எம் எடிஷன் லோகோ இடம்பெற்றுள்ளது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் லேசர் விளக்கு தொழில்நுட்பம் இதன் விளக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவிலான ஜன்னல் பகுதி மற்றும் மேற்கூரை இதற்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.

சொகுசான பயணத்திற்காக இதன் 2 அச்சுகளில் ஏர் சஸ்பென்ஷன் உள்ளது. அலாய் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்குகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. உள்புறம் அதிக இட வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதுகு பகுதியில் வலி ஏற்படாத வகையில் இருக்கை வடிவமைப்பு மற்றும் கால்களை நீட்டுவதற்கேற்ற இட வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். 7 பேர் பயணிக்கும் வகையிலானது. ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனிங், ஐந்து நிலைகளில் கட்டுப்பாடு வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். மூன்றாவது வரிசையில் அமர்ந்து பயணிப்பவரும் வானத்தை பார்த்து ரசிக்கும் வகையில் மேற்கூரையை திறந்து மூட முடியும். இதன் என்ஜின் டர்போ தொழில்நுட்பம் கொண்டது.

இது 340 ஹெச்.பி. திறனையும், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதை ஸ்டார்ட் செய்து 6.1 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் 8 ஆட்டோமேடிக் கியர்கள் உள்ளன. உள்பகுதியில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே உள்ளது. அத்துடன் பயணிகளுக்கென இரண்டு 10.2 அங்குல ஹெச்.டி. டிஸ்பிளே கொண்ட தொடு திரை டி.வி. உள்ளன.

இனிய இசையை வழங்க ஹார்மன் கார்டோன் சரவுண்ட் சிஸ்டம் உள்ளது. டிரைவர் அசிஸ்டன்ஸ், பார்க்கிங் அசிஸ்டென்ட், ரிவர்ஸ் அசிஸ்டென்ட் என பல்வேறு சாதக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது. டைனமிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் (டி.எஸ்.சி.), கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் (சி.பி.சி.), எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பக்கவாட்டு பகுதியில் பாதுகாப்பு அம்சம், குழந்தைகள் பயணிப்பதற்கேற்ற ஐசோபிக்ஸ் ஆகியன உள்ளன.

மேலும் செய்திகள்