< Back
சிறப்புக் கட்டுரைகள்
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 எம் எடிஷன்
சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 எம் எடிஷன்

தினத்தந்தி
|
10 Nov 2022 9:29 AM GMT

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எம் பிரிவின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு எடிஷன்களை ஒவ்வொரு மாடலிலும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் எக்ஸ் 6 மாடலில் எம் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.11 கோடி. இதுவரையில் இந்நிறுவனம் மொத்தம் 8 மாடல்களில் எம் எடிஷன் தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமான கிட்னி வடிவ கிரில் மத்தியில் எம் லோகோ மற்றும் 20 அங்குல அலாய் சக்கரம், ஸ்போர்ட் பிரேக், எம் ஸ்போர்ட் எக்ஸாஸ்ட் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். இதன் உள்புறம் 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங், கப் ஹோல்டர், போதுமான விளக்கு வெளிச்சம், ஹர்மான் கார்டோனின் சவுண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே உள்ளது.

இது 3 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. 340 ஹெச்.பி. திறனையும், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது. ஸ்டார்ட் செய்து 5.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும்.

மேலும் செய்திகள்