< Back
சிறப்புக் கட்டுரைகள்
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3, 20 டி எம் ஸ்போர்ட்
சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3, 20 டி எம் ஸ்போர்ட்

தினத்தந்தி
|
16 March 2023 6:45 PM IST

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எக்ஸ் 3 மாடலில் 20 டி எம் ஸ்போர்ட் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.69.90 லட்சம். கம்பீரமான தோற்றப் பொலிவை அளிக்கும் வகையில் இதன் வெளிப்புற வடிவமைப்பில் பெருமளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புற மற்றும் பின்புற பம்பர் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல் பகுதியைச் சுற்றிலும் கருப்பு நிற பெயிண்ட் இதற்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.

கருப்பு நிற மேற்பகுதியும், டிப்யூஸரும் தோற்றப் பொலிவை மேலும் மெருகேற்றுகிறது. 20 அங்குல அலாய் சக்கரம், நீல நிறத்திலான பிரேக் கேலிபர் இதற்கு அழகு சேர்க்கிறது. உள்பகுதியில் 12.3 அங்குல தொடு திரை மற்றும் 360 டிகிரி சுழலும் கேமரா உள்ளது. இனிய இசையை வழங்க ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உதவுகிறது. மேல் பகுதியிலிருந்து விரியும் டி.வி. திரை மற்றும் கண் கூசாத வகையிலான விளக்கு வெளிச்சம் கொண்டது.

இதில் 190 ஹெச்.பி. திறன், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை ஆகியன கொண்ட 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது. இது அனைத்தும் சக்கர சுழற்சி கொண்டது.

மேலும் செய்திகள்