< Back
சிறப்புக் கட்டுரைகள்
பி.எம்.டபிள்யூ எஸ்.1000 ஆர்.ஆர்
சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ எஸ்.1000 ஆர்.ஆர்

தினத்தந்தி
|
22 Dec 2022 2:32 PM IST

உயர் ரக மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது எஸ்.1000 ஆர்.ஆர்.என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இது முழுவதும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்கப்படுகிறது. இதில் மூன்று வேரியன்ட்கள் (எஸ். 1000 ஆர்.ஆர்., எஸ். 1000 ஆர்.ஆர். புரோ, எஸ். 1000 ஆர்.ஆர். புரோ எம் ஸ்போர்ட்) வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.20,25,000. புரோ மாடல் விலை சுமார் ரூ.22,15,000, ஸ்போர்ட் மாடல் விலை சுமார் ரூ.24,45,000.

கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கும். இது 4 சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜினைக் கொண்டது. இதில் ஷிப்ட் கேம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 999 சி.சி. திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், 210 ஹெச்.பி. திறனை 13,750 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும்.

இதில் 6 கியர்கள் உள்ளன. நான்கு விதமான ஓட்டும் நிலைகள் (மழை, சாலை, டைனமிக் மற்றும் ரேஸ்) உள்ளன. டி.எப்.டி. திரை உள்ளது. காற்றை கிழித்துச் செல்லும்போது உடலில் காற்று படாமல் இருக்க விண்ட் ஸ்கிரீன் உள்ளது.

மேலும் செய்திகள்