பி.எம்.டபிள்யூ. ஆர் 1250 ஆர்.டி.
|சொகுசு மற்றும் பிரீமியம் மாடல் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் புதிதாக நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
ஏரோ டைனமிக் வடிவிலான இந்த மோட்டார் சைக்கிள் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாகும். இதில் 2 சிலிண்டர் பாக்சர் என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 1254 சி.சி. திறன் கொண்டது. 136 ஹெச்.பி. திறனை 7,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 143 நியூட்டன் மீட்டர் டார்க் விசையை 6,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதை ஸ்டார்ட் செய்து 3.7 விநாடிகளில் 100 கி.மீ.வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிக பட்ச வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆகும்.
இதில் மற்றொரு மாடலாக கே 1600 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் செல்வதற்கேற்ற வகையில் 6 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 160 ஹெச்.பி. திறனை 6,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 180 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதில் முன்புறம் 10.25 அங்குல டி.எப்.டி. திரை உள்ளது. இது ஒருங்கிணைந்த நேவிகேஷன் வசதி கொண்டது. இதில் ஆடியோ சிஸ்டம் உள்ளது.