பி.எம்.டபிள்யூ. எம் 3 டூரிங்
|சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது எம் 3 டூரிங் என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இது 3 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 3.6 விநாடி களில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 278 கி.மீ. ஆகும். பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எம் பிரிவின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 510 ஹெச்.பி. திறனையும், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. அதற்கேற்ப இதில் டர்போ சார்ஜ்டு என்ஜின் உள்ளது. இதில் 8 ஆட்டோமேடிக் கியர்கள் உள்ளன. சொகுசு வாகனங்களுக்கே உரித்தான வடிவமைப்பை இது கொண்டுள்ளது.
முன்புறம் 19 அங்குலமும், பின்புறம் 20 அங்குல சக்கரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்புறம் 14.9 அங்குல இன்போ டெயின்மென்ட் திரையும், 12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்டரும் உள்ளது. கார்பன் பைபரால் ஆன முன் இருக்கைகள் உள்ளன. சொகுசான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.65 லட்சம்.