< Back
சிறப்புக் கட்டுரைகள்
பி.எம்.டபிள்யூ. ஐ 4
சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. ஐ 4

தினத்தந்தி
|
2 Jun 2022 3:34 PM IST

பிரீமியம் மற்றும் சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக ஐ 4 மாடல் காரை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

செடான் பிரிவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள முதல் பேட்டரி மாடல் கார் இதுவாகும். பேட்டரியில் இயங்கினாலும் பெட்ரோல், டீசல் காருக்கு இணையான செயல் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டார்ட் செய்து 5.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிட முடியும்.

இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 590 கி.மீ. தூரம் வரை ஓடும் திறன் கொண்டது. அதிக செயல் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி (80.7 கிலோவாட் அவர்) மிகக் குறைவான நேரத்தில் சார்ஜ் ஆகும். சார்ஜ் ஆக வசதியாக சுவரில் மாட்டும் சார்ஜரையும் (205 கிலோவாட், 50 கிலோவாட், 11 கிலோவாட்) இந்நிறுவனம் அளிக்கிறது. வெள்ளை, கருப்பு, சபையர், கிரே உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.

இதில் 19 அங்குல அலாய் சக்கரம் உள்ளது. உள்புறத்தில் 12.3 அங்குல டிஜிட்டல் திரை மற்றும் காரின் செயல் பாடுகளுக்கென 14.9 அங்குல திரை உள்ளது. காரின் செயல் பாடுகளை இலகுவாக்க 8 வகையான கூடுதல் நுட்பங்கள் பயன் படுத்தப்பட் டுள்ளன.

அதில் பி.எம்.டபிள்யூ. வர்ச்சுவல் அசிஸ்டன்ட் வசதி நேரடியாக டிரைவருடனான இணைப்பை அளிக்கும்.

மேலும் செய்திகள்