< Back
சிறப்புக் கட்டுரைகள்
பிளாபுங்க்ட் வயர்லெஸ் சவுண்ட்பார்
சிறப்புக் கட்டுரைகள்

பிளாபுங்க்ட் வயர்லெஸ் சவுண்ட்பார்

தினத்தந்தி
|
28 July 2022 3:25 PM GMT

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக வயர்லெஸ் புளூடூத் சவுண்ட்பாரை எஸ்.பி.ஏ. 30 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

பேட்டரி வசதி கொண்டதாக சவுண்ட்பார் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். நவீன தொழில்நுட்பம், அழகிய ஐரோப்பிய வடிவமைப்பு இதற்கு சிறப்பு சேர்க்கிறது. இதில் உள்ள குவாட் ஸ்பீக்கர்கள் ஹெச்.டி. தரத்திலான ஒலியை துல்லியமாக அளிக் கிறது. இதில் ஈக்வ லைஸர் உள்ளன. ஆறு விதமான நிலைகளில் இதில் ஒலி வெளிப் படும். இதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் தொடர்ந்து செயல்பட உதவும். டி.வி. மற்றும் பிற இசை சார்ந்த கருவிகளுடன் இதை இணைக்க முடியும். 30 வாட் திறனை வெளிப்படுத்தும். ஐ-போன், ஆண்ட்ராய்டுபோன் உள்ளிட்டவற்றையும் இதில் இணைத்து பாடல்களைக் கேட்டு மகிழலாம். இதன் விலை சுமார் ரூ.2,999.

மேலும் செய்திகள்