< Back
சிறப்புக் கட்டுரைகள்
பிளாபுங்க்ட் சவுண்ட்பார்
சிறப்புக் கட்டுரைகள்

பிளாபுங்க்ட் சவுண்ட்பார்

தினத்தந்தி
|
23 March 2023 7:10 PM IST

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக புளூடூத் இணைப்பு மூலம் செயல்படும் சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்.பி.ஏ 25 என்ற பெயரில் வந்துள்ள இந்த சவுண்ட் பாரில் ஆர்.ஜி.பி. விளக்குகள் உள்ளன. இதில் 25 வாட் திறனை வெளிப்படுத்தக்கூடிய இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. மைக்ரோபோனும் உள்ளது. இதனால் அறிவிப்புகளையும் இதன் வாயிலாக மேற்கொள்ள முடியும்.

இதில் 2000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. இதன் எடை 600 கிராம் மட்டுமே. கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த சவுண்ட்பாரின் விலை சுமார் ரூ.1,899.

மேலும் செய்திகள்