< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
பிளாபுங்க்ட் பி.ஹெச் 51 மோக்–ஷா ஹெட்போன்
|2 Sept 2022 8:01 PM IST
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக பி.ஹெச் 51. மோக்–ஷா என்ற பெயரில் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2,999. அழகிய வடிவமைப்பு, காதில் கச்சிதமாக பொருந்தும் தன்மை ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். ஸ்டீரியோ போன்ற இசை அனுபவத்தை இதில் கேட்டு மகிழ முடியும்.
இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 மணி நேரம் செயல்படும். இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் மற்றும் உள்ளீடாக மைக்ரோபோன் உள்ளது. இது மடக்கி எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் வந்துள்ளது.