< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலை
|18 Dec 2022 7:03 PM IST
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் தலைமை உதவி பொது மேலாளர், தலைமை மேலாளர், பொது அதிகாரி, கருவூல அதிகாரி போன்ற பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 551 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பி.இ., பி.டெக், ஐ.டி., சி.ஏ., எம்.பி.ஏ., பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு என சம்பந்தப்பட்ட துறையுடன் சார்புடைய படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட துறைகளில் பணி அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்ப 25 முதல் 45 வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-12-2022. மேலும் விரிவான விண்ணப்ப நடைமுறைகளை https://bankofmaharashtra.in/current-openings என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.