< Back
சிறப்புக் கட்டுரைகள்
புதிய வடிவமைப்பில் பஜாஜ் பல்சர் பி 150
சிறப்புக் கட்டுரைகள்

புதிய வடிவமைப்பில் பஜாஜ் பல்சர் பி 150

தினத்தந்தி
|
1 Jan 2023 3:14 PM IST

பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் பல்சர் மாடல் மிகவும் பிரபலமானதாகும். இதில் பி 150 மாடல் தற்போது பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டதாக வந்துள்ளது.

நவீன ஸ்போர்டி வடிவமைப்புடன் 150 சி.சி. திறன் கொண்டது. புதிய தலை முறையினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது 14.5 பி.எஸ். திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,19,757.

சிவப்பு, நீலம், கருப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். இதன் முகப்பு விளக்கு எல்.இ.டி. புரொஜெக்டர் விளக்காகும். பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது.

ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய வசதி உள்ளது. இது பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டில் உள்ளதால், பயணத்தின்போதே ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். கியர் இன்டிகேட்டர் உள்ளது. இதன் பெட்ரோல் டேங்கில் 14 லிட்டர் பெட்ரோலை நிரப்பிக்கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்