பஜாஜ் பல்சர் என்.எஸ் 160
|பஜாஜ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானதும், இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுமான மோட்டார் சைக்கிள் பஜாஜ் பல்சராகும்.
இதில் என்.எஸ் 160 மாடலை இந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,34,675. இதில் டிஸ்க் பிரேக்குகளில் கிரிமிசியா காலிபர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்டது. இரண்டாவது கட்டமாக பாரத் புகைவிதி 6 சோதனை விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
செமி டிஜிட்டல் கன்சோல், எந்த கியரில் வாகனம் செல்கிறது என்பதை உணர்த்தும் கியர் இண்டிகேட்டர், எத்தனை கி.மீ. தூரம் ஓடியுள்ளது என்பதைக் காட்டும் வசதிகளைக் கொண்டது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் எடை 1 கிலோ குறைவாகும். முன்புற ஹாலோஜென் விளக்கு வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இது 160.3 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 17.2 பி.எஸ். திறன் மற்றும் 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. கண் கவரும் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது.