< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
பஜாஜ் சேடக் பிரீமியம்
|16 March 2023 7:43 PM IST
ஸ்கூட்டர் மாடல்களைப் பொறுத்தமட்டில் பஜாஜ் நிறுவனத்தின் சேடக் மாடல் ஸ்கூட்டர் மிகவும் பிரபலம்.
தற்போது சேடக் மாடல் ஸ்கூட்டர்கள் மறு அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் ஆட்டோ. இதில் பிரீமியம் மாடல்களில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டு இருக்கிறது.
இவை மூன்று கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. இதிலுள்ள பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் 128 கி.மீ. தூரம் வரை ஓடும். வண்ணத் திரை (எல்.சி.டி.) உள்ளது. இரு வண்ணத்திலான இருக்கை வசதி கொண்டது. சேடக் பிரீமியம் 2023 எடிஷன் விலை சுமார் ரூ.1.51 லட்சம்.