< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் பேட்டரி கார்கள்
சிறப்புக் கட்டுரைகள்

ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் பேட்டரி கார்கள்

தினத்தந்தி
|
12 Jan 2023 2:53 PM IST

சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இம்முறை அதிக எண்ணிக்கையில் பேட்டரி கார்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இம்முறை அதிக எண்ணிக்கையில் பேட்டரி கார்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. ஜனவரி 13-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் இடம்பெறும் பேட்டரி கார்களைப் பற்றிய முன்னோட்டம்…

மாருதி ஒய்.ஒய் 8. எஸ்.யு.வி.

கார் தயாரிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்.யு.வி. மாடலை இதில் காட்சிப்படுத்துகிறது. இது முழுவதும் பேட்டரியில் இயங்கும் சூழல் பாதுகாப்பு காராகும். இந்தக் காரை குஜராத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 48 அல்லது 59 கிலோ வாட் அவர் பேட்டரியைப் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. தூரம் ஓடக் கூடிய தாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் இ.வி.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பஞ்ச் மாடலில் பேட்டரியில் இயங்கும் மாடலை இக்கண்காட்சி யில் காட்சிப்படுத்துகிறது. இது மைக்ரோ எஸ்.யு.வி. மாடலாகும். வர்த்தக ரீதியில் ஜூன் மாதத்தில் இந்தக் காரை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் அயோனிக் 6

ஹூண்டாய் நிறுவனம் அயோனிக் 6 என்ற பெயரிலான புதிய மாடல் செடான் காரை கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறது. இந்தக் கார் 4,855 மி.மீ. நீளமும், 1,880 மி.மீ. அகலமும், 1,495 மி.மீ உயரமும் உடையது. இதில் 54 கிலோவாட் அவர் மற்றும் 77 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. 54 கிலோவாட் அவர் கொண்ட பேட்டரி உடைய கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 429 கி.மீ. தூரம் ஓடும். 77.4 கிலோவாட் அவர் பேட்டரி கார் 614 கி.மீ. தூரம் ஓடும் என தெரிவித்துள்ளது. இதுவும் அனைத்து சக்கர சுழற்சி கொண்ட மாடலாக வந்துள்ளது.

எம்.ஜி 4 ஹேட்ச்பேக்

மோரிஸ் காரேஜ் (எம்.ஜி.) மோட்டார்ஸ் நிறுவனம் ஹேட்ச்பேக் மாடலில் பேட்டரி காரை காட்சிப்படுத்துகிறது. காரினுள் 10.2 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், எல்.இ.டி. விளக்கு வசதிகள் உள்ளன. இது 4,287 மி.மீ. நீளமும், 1,836 மி.மீ. அகலமும், 1,506 மி.மீ. உயரமும் கொண்டது.

இதில் 51 கிலோவாட் அவர் மற்றும் 64 கிலோவாட் அவர் பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. இது 170 ஹெச்.பி. மற்றும் 203 ஹெச்.பி. திறனை வெளிப் படுத்தக் கூடியது. இது 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது.

மேலும் செய்திகள்