< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஆடி கியூ 3 ஸ்போர்ட்பேக்
சிறப்புக் கட்டுரைகள்

ஆடி கியூ 3 ஸ்போர்ட்பேக்

தினத்தந்தி
|
16 Feb 2023 8:38 AM GMT

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம் கியூ 3 ஸ்போர்ட்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 190 ஹெச்.பி. திறனையும், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக் கூடியது. மிகச் சிறப்பான செயல்திறன்களுடன் அழகிய வடிவமைப்பை விரும்பும் வாடிக்கை யாளர்களுக்கான தயாரிப்பாக இது வந்துள்ளது. இதை ஸ்டார்ட் செய்த 7.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பின்புற எல்.இ.டி. விளக்குகள் இதன் சிறப்பம்சமாகும். திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, அலாய் சக்கரம் ஆகியன இதன் தோற்றப் பொலிவை மெருகேற்றும். வயர்லெஸ் சார்ஜிங், கிளைமேட் கண்ட்ரோல் வசதி, மின்சாரத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான முன்புற இருக்கை, முதுகு தண்டுவடத்தை பாதுகாக்கும் வகையிலான இருக்கை வசதி, ஆடி சவுண்ட் சிஸ்டம் ஆகியன பயணத்தை சவுகரியமானதாக்கும்.

இதில் 7 கியர்கள் உள்ளன. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. பாதுகாப்பான பயணத்துக்கு 6 ஏர் பேக், டயர் பிரஷர் மானிட்டர், குழந்தைகள் பயணிக்கும் வகையிலான ஐ-சோபிக்ஸ் இருக்கை வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது.

மேலும் செய்திகள்