< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஏ.எஸ்.யு.எஸ். விவோ புக் லேப்டாப்
|12 Aug 2022 7:52 PM IST
ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக விவோ புக் மாடல் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
வசதியான செயல்பாடு, நீடித்து செயல்படும் வகையிலான பேட்டரி, தொடு திரை வசதி உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இது 15.6 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. இது மிகவும் மெல்லியதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் எடை 1.7 கி.கி ஆகும்.
இதில் இன்டெல் கோர் ஐ.எஸ். பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இது 512 ஜி.பி. நினைவகம், விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. நீலம் மற்றும் கிரே வண்ணங்களில் வந்துள்ளது. இதில் விண்டோஸ் 11 இயங்குதளம் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.49,900 முதல் ஆரம்பமாகிறது.