< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஏ.எஸ்.யு.எஸ். எக்ஸ்பர்ட் புக் சீரிஸ் லேப்டாப்
சிறப்புக் கட்டுரைகள்

ஏ.எஸ்.யு.எஸ். எக்ஸ்பர்ட் புக் சீரிஸ் லேப்டாப்

தினத்தந்தி
|
20 Dec 2022 2:47 PM GMT

கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் எக்ஸ்பர்ட்புக் சீரிஸில் பி 5, பி 7, பி 2, பி 3, பி 9 மற்றும் பி 1 என 6 மாடல்களில் லேப்டாப்களை வெளியிட்டுள்ளது.

இவை அனைத்தும் 12-வது தலைமுறையைச் சேர்ந்தவையாகும். அதிக விரைவான செயல்பாடு களைக் கொண்டதாகவும், மிகச் சிறப்பான இயங்கும் அனுபவத்தை அளிப்பவையாகவும் இவை விளங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பி 5 மாடலைப் பொறுத்தமட்டில் இதில் இன்டெல் கோர் ஐ 7 பி பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடு விரல் செயல்பாடுகளைக் கொண்ட திரையை உடையது. இதனால் ஸ்டைலெஸ் பேனா மூலம் இதை செயல்படுத்த முடியும். இதை 1 5 விநாடி சார்ஜ் செய்தாலே 45 நிமிடம் செயல்படும் திறன் கொண்டது. 4-கே ரெசல்யூஷனில் காட்சிகளைக் காண முடியும். பி 7 மாடலைப் பொறுத்தமட்டில் தொழில்முறையினருக்கு மிகவும் வசதியானது. அதற்கேற்ப இதில் 64 ஜி.பி. ரேம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதில் இருவழி இரைச்சல் தவிர்ப்பு நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் வீடியோ கான்பரன்ஸ் மேற்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இதில் கண் கூசாத தொடு திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலும் ஸ்டைஸ் பேனா பயன்படுத்த முடியும். இதன் மேல்பாகம் உறுதியான அலுமினியம் மற்றும் மக்னீசியம் கலவையால் ஆனது. இவற்றின் விலை சுமார் ரூ.1,39,000 முதல் ஆரம்பமாகிறது.

மேலும் செய்திகள்