< Back
சிறப்புக் கட்டுரைகள்
ராணுவத்தில் பணி
சிறப்புக் கட்டுரைகள்

ராணுவத்தில் பணி

தினத்தந்தி
|
12 Feb 2023 7:03 PM IST

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராணுவ ஆயுதப்படை மையத்தில் (ஏ.ஓ.சி) டிரேட்ஸ்மேன் (1,249), தீயணைப்புவீரர் (544) என 1,793 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தொழில் துறை சார்ந்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தீயணைப்பு வீரர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

இரு பதவிக்கும் விண்ணப்பம் செய்பவர்கள் 26-2-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-2-2023.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.aocrecruitment.gov.in என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்