< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஆப்பிள் ஐ-போன் 14 மற்றும் 14 பிளஸ்
|23 Sept 2022 2:22 PM IST
ஆப்பிள் நிறுவனம் 6.1 அங்குல அளவிலான ஐ-போன் 14 மற்றும் 6.7 அங்குல திரையைக் கொண்டதாக ஐ-போன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை சுமார் ரூ.79,900. பெரிய திரை, ஏ 15 பயோனிக் சிப் பிராசஸரைக் கொண்டவையாக இவை வந்துள்ளன. 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஐ.ஓ.எஸ். 16 இயங்குதளம் கொண்டதாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சிம் கார்டு (நானோ மற்றும் இ-சிம்) போடும் வசதி கொண்டது. பின்புறம் மற்றும் முன்புறம் 12 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. உள்ளீடாக லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 15 வாட் மேக்சேப் வயர்லெஸ் சார்ஜருடன் வந்துள்ளது.