< Back
சிறப்புக் கட்டுரைகள்
பழங்கால வாகன அருங்காட்சியகம்
சிறப்புக் கட்டுரைகள்

பழங்கால வாகன அருங்காட்சியகம்

தினத்தந்தி
|
21 Feb 2023 8:45 AM GMT

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வண்டிகள்தான் பலரையும் ஈர்க்கின்றன. பழமையான வரலாற்று பின்னணி கொண்ட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

பழங்காலத்தில் மன்னர் தேரில் பவனி வருவது போன்ற தோற்றம் கொண்ட குதிரை வண்டிகள், அந்தக் காலத்தில் மன்னர்களை தவிர்த்து மற்றவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்திய வாகனங்கள் முதல் இப்போது பயன் பாட்டில் இருக்கும் நவீன வாகனங்களில் உள்ள பழமை மாறாத கட்டமைப்புகள் வரையிலான வாகனங்களை கொண்ட அருங்காட்சியங்கள் உலகின் சில பகுதிகளில் இருக்கின்றன.

அவற்றுள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரின் அபோன்சோ டி அல்புகர்கி சதுக்கத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் முதன்மையானது. அங்கு பழமையான வரலாற்று பின்னணி கொண்ட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

குறிப்பாக 16-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் வாகனங்கள் எந்த அளவிற்கு உருமாற்றம் அடைந்திருக்கின்றன என்பதை கண்முன்னே காட்சிப் படுத்தும் வகையில் விதவிதமான தோற்றத்துடன் வாகனங்கள் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன.

எனினும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வண்டிகள்தான் பலரையும் ஈர்க்கின்றன. மக்கள் அதிகம் பார்வையிடும் அருங்காட்சியமாக இது விளங்குகிறது. மேலும் உலக அளவில் வரலாற்றுடன் தொடர்புடைய பழமையான வண்டிகள் ஒருசேர சேகரித்து வைத்திருக்கும் இடமாகவும் உள்ளது.

இந்த அருங்காட்சியகம் ஆரம்பத்தில் போர்த்துகீசிய குதிரையேற்ற பயிற்சி இடமாக விளங்கிய பெலெமின் ராயல் ரைடிங் ஹாலில் அமைந்திருந்தது. பிகேடிரோ ரியல் என அழைக்கப்படும் இது பெலெம் அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியாகும். இப்போது அது போர்ச்சுக்கல் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமாக விளங்குகிறது.

இப்போது வாகனங்கள் குழுமி இருக்கும் அருங்காட்சியகமும் பழங்கால அரண்மனை கட்டமைப்புகளை கொண்டிருக்கிறது. இத்தாலி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட வண்டிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்