< Back
சிறப்புக் கட்டுரைகள்
5 புதிய மாடல்களில் ஸ்கார்பியோ என்
சிறப்புக் கட்டுரைகள்

5 புதிய மாடல்களில் ஸ்கார்பியோ என்

தினத்தந்தி
|
5 Jan 2023 2:18 PM IST

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் மக்களிடையே அதிக பிரபலமானது ஸ்கார்பியோ மாடலாகும்.

இதில் சமீபத்தில் ஸ்கார்பியோ என் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 5 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இஸட் 2 பெட்ரோல் (இ), இஸட் 2 டீசல் (இ), இஸட் 4 பெட்ரோல் (இ,) இஸட் 4 டீசல் (இ) மற்றும் இஸட் 4 (இ) ஏ.டபிள்யூ.டி. என ஐந்து மாடல்கள் வந்துள்ளன. இவை அனைத்துமே மானுவல் கியர் பாக்ஸ் மாடலாகும். எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் (இ.எஸ்.சி.) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதி உள்ளது.

இது 203 ஹெச்.பி. திறன் கொண்ட 2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 175 ஹெச்.பி. திறன் கொண்ட 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜினைக் கொண்டவை. இவை அனைத்துமே 6 கியர்களைக் கொண்ட மாடலாகும். இதில் ஏ.டபிள்யூ.டி. மாடல் நான்கு சக்கர சுழற்சி கொண்டது.

மேலும் செய்திகள்