< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
அம்பரேன் வைஸ் ரோம் ஸ்மார்ட் கடிகாரம்
|30 Jun 2022 7:08 PM IST
அம்பரேன் நிறுவனம் வைஸ் ரோம் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
1.28 அங்குல வட்ட வடிவிலான திரையைக் கொண்டது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்யும். தூக்க குறைபாடுகளை அறிவுறுத்தும். 60-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது துல்லியமாகக் காட்டும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் செயல்படக் கூடியது. ஸ்மார்ட்போனின் கேமரா செயல்பாடுகளை இதன் மூலம் இயக்கலாம். போன் இருக்குமிடம் அறிவதற்கும்உதவும். ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை உணர்த்தும். இதில் 260 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது 10 நாட்கள் வரை செயல்படும். இதன் விலை சுமார் ரூ.1,799.