< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
அம்பரேன் பவர் பேங்க்
|18 Aug 2022 7:33 PM IST
மின்னணு சாதன உதிரி பாகங்களைத் தயாரிக்கும் அம்பரேன் நிறுவனம் ஏரோசிங்க் பி.பி 10 என்ற பெயரில் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,799. இரண்டு வகைகளில் விரைவாக சார்ஜ் செய்யும் வசதி கொண்டது. இதில் ஸ்மார்ட்போனை வைப்பதற்கேற்ற ஹோல்டர் வசதி உள்ளது. மிக மெல்லியதாகவும், எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும் இது உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது. நழுவி விழாத வகையில் கிரிப் வசதி கொண்டது. இது விரைவாக சார்ஜ் ஆக 18 வாட் சார்ஜர் அளிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் ஆக 3 மணி 10 நிமிடம் ஆகும்.