< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
அம்பரேன் பவர் பேங்க்
|7 July 2022 7:45 PM IST
அம்பரேன் நிறுவனம் 50 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.
அம்பரேன் பவர் பேங்க் விலை சுமார் ரூ.3,999. மலையேற்றம், சாகச பயணம் மேற்கொள்வோருக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. எளிதில் சூடேறாத வகையிலும், ஷார்ட் சர்கியூட் ஆகாத வகையிலும் இது 9 அடுக்கு பூச்சுகளைக் கொண்டது. உயர் தர மெட்டாலிக் அடுக்கு பகுதியைக் கொண்டதாக இது வந்துள்ளது. இது 20 வாட் திறனை வெளிப்படுத்தும். இதனால் மின்னணு சாதனங்கள் விரைவாக சார்ஜ் ஆகும். கருப்பு மற்றும் நீல நிறத்தில் வந்துள்ளது.