< Back
சிறப்புக் கட்டுரைகள்
அமேசானின் புதிய கின்டில்
சிறப்புக் கட்டுரைகள்

அமேசானின் புதிய கின்டில்

தினத்தந்தி
|
23 Sept 2022 8:54 PM IST

அமேசான் நிறுவனம் புதிய ரக கின்டிலை 6 அங்குல திரையைக் கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.

சி டைப் சார்ஜிங் வசதி கொண்டதாகவும், 6 வாரங்கள் வரை நீடித்திருக்கும் பேட்டரியைக் கொண்ட தாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் மேம்பட்ட இந்த மாடலை அமேசான் அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே உள்ள கின்டில் மாடலை விட எடை குறைவானதாகவும் (128 கிராம்), மெல்லியதாகவும் (8 மி.மீ), கண்களைக் கூசாத வகையிலான வெளிச்சத்தை வெளியிடும் வகையில் இது வந்துள்ளது. மேலும் இதில் நினைவகத் திறனும் முந்தைய மாடல்களைக் காட்டிலும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் டெனிம் வண்ணத்தில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.7,955. இதற்கு மேல் உறை கருப்பு, ரோஜா, டெனிம் மற்றும் எமரால்டு வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும் செய்திகள்