< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
அமேசான் கின்டில்
|22 Dec 2022 9:53 PM IST
அமேசான் நிறுவனம் 16 ஜி.பி. நினைவக வசதி கொண்ட கின்டில் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இது எடை குறைவானது. சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதன் பேக்கேஜிங் அனைத்துமே மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டுள்ளது. முந்தைய மாடலில் 8 ஜி.பி. நினைவகம் இருந்தது. இப்புதிய மாடலில் நினைவகத் திறன் 16 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 வாரங்கள் செயல்படும். இதன் மேலுறை மூடப்பட்டாலே இது தானாக அணைந்து விடும். அதேபோல உறையை நீக்கியதும் உடனே செயல்பட்டு படித்த பக்கத்தை பளிச்சென காட்டும்.
வை-பை இணைப்பு வசதி கொண்டது. ஏறக்குறைய 20 லட்சம் தலைப்புகளில் கட்டுரைகளை பார்க்க முடியும். கருப்பு மற்றும் நீல நிறத்தில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.9,999. இது கருப்பு, பச்சை, டெனிம், இளம் சிவப்பு நிறங்களில் கிடைக்கும்.