அமேஸ்பிட் ஸெப் இ ஸ்மார்ட் கடிகாரம்
|அமேஸ்பிட் நிறுவனம் புதிதாக ஸெப் இ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
வட்ட வடிவம் மற்றும் சதுர வடிவில் இவை வந்துள்ளன. இவை முறையே 1.28 அங்குலம் மற்றும் 1.65 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளன.
இதில் சதுர வடிவிலான கடிகாரம் செய்திகளைப் படிப்பதற்கு மிகவும் வசதியானதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிவது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். புளூடூத் இணைப்பு கொண்டது. ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இணைத்து செயல்படுத்தும் வகையிலானது. 87 வகையான விளையாட்டுகளில் எதில் நீங்கள் ஈடுபட்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும். ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை உணர்த்தும். இணைய செய்தி மற்றும் குறுஞ்செய்தி குறித்து அறிவுறுத்தும். தூக்க குறைபாடுகளை உணர்த்தும். நீர்புகா தன்மை கொண்டது. கருப்பு, கிரே வண்ணங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.8,999.